ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ள வாகனங்கள்
சுங்கத் திணைக்களத்தினால் அரச உடமையாக பிரகடனப்படுத்தப்பட்ட வாகனங்களை போதைப்பொருள் சோதனைகள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை பொலிஸாருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று(20.12.2022) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பரிசோதித்ததாக அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தடுப்பு நடவடிக்கை
ஆய்வுக்குப் பின் அமைச்சர் கூறியதாவது, பல ஆண்டுகளுக்கு முன் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தற்போது பழுதடைந்து வருகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் வாகனங்கள் தொடர்பான சட்டத் தடைகள் நிவர்த்தி செய்யப்பட்டு பொதுமக்களின் நலன் கருதி வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
12,000 வாகனங்கள் மட்டுமே
தற்போது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது. 12,000 வாகனங்கள் மட்டுமே சோதனைகளை நடத்துவதற்கு இலங்கை காவல்துறை வசம் உள்ளது. அவற்றில் சில வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை.
தற்போதுள்ள 600 பொலிஸ் நிலையங்கள் மற்றும் புதிதாக நிறுவப்படவுள்ள 111 பொலிஸ் நிலையங்களின் செயற்பாடுகளுக்கு தற்போதுள்ள வாகனங்கள் போதுமானதாக இல்லை.
இலங்கை பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பொலிஸாரின் நடவடிக்கைகளுக்காக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.”என தெரிவித்துள்ளார்.




