7 மாதங்களில் 1000 பில்லியன் ரூபா வருமானத்தைக் கடந்த சுங்கத் திணைக்களம்

By Rukshy Aug 03, 2025 04:16 PM GMT
Report

சுங்கத் திணைக்களம் 7 மாதங்களில் 1200 பில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானத்தைப் பெற்றுள்ளது என சுங்க பேச்சாளர் சீவலி அருங்கொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(02) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜூலை மாதத்தில் மாத்திரம் 231 பில்லியன் ரூபா அதிகூடிய வருமானம் கிடைத்துள்ளது.

அந்த வகையில் இவ்வாண்டு சுங்கத் திணைக்களத்துக்கான வருமான இலக்கை இலகுவாக அடைய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

காந்தனின் பள்சர் பைக் - மங்களன் மாஸ்டரை நெருங்கிய CID.. ஆபத்தான தீவுச்சேனை வதைமுகாம்..!

காந்தனின் பள்சர் பைக் - மங்களன் மாஸ்டரை நெருங்கிய CID.. ஆபத்தான தீவுச்சேனை வதைமுகாம்..!

116 பில்லியன் ரூபா அதிக வருமானம் 

2025 ஆகஸ்ட் முதலாம் திகதி வரை 1227 பில்லியன் ரூபா வருமானத்தை இலங்கை சுங்க திணைக்களம் வருமானமாகப் பெற்றுள்ளது.

7 மாதங்களில் 1000 பில்லியன் ரூபா வருமானத்தைக் கடந்த சுங்கத் திணைக்களம் | Customs Department Crosses 1000 Billion Revenue

கடந்த ஜூலை வரலாற்றில் முதன் முறையாக ஒரே மாதத்தில் அதிக வருமானமாக 231 பில்லியன் ரூபா சுங்கத் திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரே மாதத்தில் இவ்வாறு அதிகூடிய கிடைக்கப் பெற்றதில்லை. இவ்வாண்டு எமது வருமான இலக்கு 2115 பில்லியன் ரூபாவாகும். 

அந்த இலக்கில் தற்போது 1227 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

ஜூலை 31ஆம் திகதி வரை எட்டப்பட வேண்டிய இலக்கை விட 116 பில்லியன் ரூபா அதிக வருமானம் கிடைத்துள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு

வாகன இறக்குமதியூடாகவே அதிக வருமானம் கிடைத்துள்ளது. அந்த வகையில் வாகன இறக்குமதியூடாக 300 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

7 மாதங்களில் 1000 பில்லியன் ரூபா வருமானத்தைக் கடந்த சுங்கத் திணைக்களம் | Customs Department Crosses 1000 Billion Revenue

28 000க்கும் அதிக வாகனங்கள் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதே நிலைமை தொடர்ந்தும் காணப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு அப்பால் இறக்குமதி செய்யப்பட்ட வாகனமொன்று மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்துக்கமையவே அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதத்துக்கு சுங்கத் திணைக்களம் மாத்திரமே காரணமல்ல.

ஏனைய நிறுவனங்கள், திணைக்களங்களில் பங்களிப்பும் அதில் உள்ளது. எனவே அனைத்து தரப்பினரும் இணைந்து முறையாக செயற்படும் பட்சத்தில் கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்படக் கூடிய தாமதத்தை தவிர்த்துக் கொள்ளலாம் என்றார். 

அநுரவுக்கு பாதுகாப்பு அவசியம் : வலியுறுத்தும் சஜித் தரப்பு

அநுரவுக்கு பாதுகாப்பு அவசியம் : வலியுறுத்தும் சஜித் தரப்பு

புதிய கல்வி திட்டத்தில் மாணவர்களுக்கு ஆபத்தாகும் GPA திட்டம்...

புதிய கல்வி திட்டத்தில் மாணவர்களுக்கு ஆபத்தாகும் GPA திட்டம்...

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US