விளக்கமறியல் உயிரிழப்புக்கள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிர்ச்சி தகவல்
கடந்த வருடம் 24 சந்தேக நபர்கள் பொலிஸாரின் (Police Sri Lanka) விளக்கமறியலில் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது.
அத்துடன், சந்தேகநபர்கள், ஆயுதங்களை மீட்க இரகசிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படுவதாக கூறப்படும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன.
எனினும், தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் பொறுப்பாகும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
யுக்திய நடவடிக்கை
மேலும், கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரின் காவலில் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, 2023ஆம் ஆண்டில் மாத்திரம் பொலிஸாருக்கு எதிராக 9,417 பொது முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 44 யுக்திய நடவடிக்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
