மருத்துவத்துறை பாரிய சவாலை எதிர்நோக்கி வருகின்றது: நாகேஷ்வரன்
”கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தமை, வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு கிடைக்கப்பெறாமை மற்றும் மருந்துகளுக்கான பற்றாக்குறை என்பவற்றால் மருத்துவ துறை பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்கின்றது” என மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நாகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பொன்று இன்று(26) பகல் நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நாகேஷ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களின் அவலம்
”வைத்தியர்களுக்கு வழங்க வேண்டிய மேலதிக நேர கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.
அதே வேளை வைத்தியசாலைகளில் முக்கியமான மருந்துகளுக்கான பற்றாக்குறையும் காணப்படுகின்றது.

இதனால் மருத்துவத்துறை பாரிய சவாலை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
தாக்குதல்
எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்காக எடுத்த முயற்சிகளின் போது பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் இதற்கு சரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்னும் 4 நாட்களில் எதிர்பாராத அளவு செல்வத்தை கொடுக்கும் சுக்கிரன் பெயர்ச்சி- உங்களுக்கும் லக் இருக்கா? Manithan
பிரான்ஸ் அருங்காட்சியக திருட்டில் பயன்படுத்தப்பட்ட கிரேன்., விளம்பரம் செய்த ஜேர்மன் நிறுவனம் News Lankasri