கொழும்பில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
கொழும்பில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் உடன் அழுலாகும் வகையில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள் அறிவிப்பு வரும் வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களனி மற்றும் கல்கிசை பொலிஸ் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதியதின் இல்லம் முற்றுகையிடப்பட்டு இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
