ஊடரங்குச் சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு Photo)
புதிய இணைப்பு
தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன்கிழமை (11) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, நாளை (10) அதிகாலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்குமென அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை தளர்த்தப்படவுள்ளது.
நாளை காலை 7 மணிக்கு இவ்வாறு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.
இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குறித்த காலப்பகுதியில் பொது வீதிகளில் புகையிரத கடவைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்கள் மற்றும் கடலோரங்களில் ஒன்று கூடுவதற்கோ அல்லது உலாவுவதற்கோ முழுமையாக தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.