ஊரடங்கு நேரத்தில் கொழும்பின் முக்கிய பகுதியில் மக்கள் சிலரின் நடமாட்டம் - வெளியான புகைப்படங்கள்
நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த கெடுபிடி நிலைகளில் தளர்வு ஏற்பட்டுள்ளதை உணர முடிவதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கொழும்பின் சில பகுதிகளில் மக்கள் நடமாட்டம் காணப்படுவதை அவதானிக்க முடிவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பின் முக்கிய பகுதியான கொழும்பு - கொச்சிக்கடை ஜம்பட்டா வீதி பகுதியில் இன்றைய தினம் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் போதும் மக்கள் சிலரின் நடமாட்டத்தை வீதியில் காண முடிவதாக கூறப்படுகிறது.
எனினும் இவர்கள் அனுமதிப் பத்திரத்துடன் வீட்டிலிருந்து வெளியில் வந்துள்ளார்களா என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam
