தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு யாருக்கெல்லாம் பொருந்தாது? அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள தகவல்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய பிரதிநிதிகள் குழுவுடன் சுற்றுலாத்துறை அமைச்சில் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்கள் சுகாதார வழிகாட்டுதலின் கீழ் இயங்க அனுமதிக்கப்படுவர்.
கோவிட் தொற்று நோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதே வேளையில், பொருளாதாரத்தை உயர்த்தவும், நாட்டை முன்னோக்கி நகர்த்தவும் அரசாங்கம் விரும்புகிறது.
அதன்படி அந்தந்த துறைகளுக்கு உரிய அனுமதிகள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
