ஊரடங்கு உத்தரவு நீடிப்பு தொடர்பில் நாளை வெளியாகவுள்ள முக்கிய தீர்மானம்
எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிப்பது தொடர்பில் நாளை இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நாளை இடம்பெறவுள்ள கோவிட் தடுப்பு செயலணி கூட்டத்தின் போது இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,நாட்டை முழுமையாகத் திறக்கும் அளவுக்கு ஆரோக்கியமான மட்டத்தை நாம் இன்னமும் அடையவில்லை. இப்போதும் நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டுள்ளது.
இவ்வாறான நிலையில் கட்டுப்பாடுகள் இல்லாது நாட்டைத் திறந்தால், மிக மோசமான இன்னொரு கோவிட் வைரஸ் அலைக்கு முகங்கொடுக்க நேரிடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விசேட வைத்திய நிபுணர்கள் நேற்று கூட்டாகச் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மேலும்,பலவீனமான சுகாதாரக் கட்டமைப்பு காரணமாக நாட்டில் தென்னாபிரிக்க வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன எனவும் விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 23 மணி நேரம் முன்
பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்: பனிப்புயலை பொருட்படுத்தாமல் இந்திய சாரதி செய்த உதவி News Lankasri
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam