யாழில் சுகாதாரத்துக்கு முரணாக தயிர் விற்பனை: இருவருக்கு அபராதம்
யாழ்ப்பாணம்-அச்சுவேலி பகுதியில் சுகாதாரத்துக்கு முரணான முறையில் தெருவோரத்தில் வைத்து தயிர் விற்பனை செய்த இருவருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சன்னதி கோவில் உற்சவ காலத்தை முன்னிட்டு, கடந்த 28.08.2026 அன்று அச்சுவேலி 1ஆம் பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகர் அ. சர்மிலன் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களான உதயபாலா, சால்ஸ் ஆகியோரால் உணவுச் சுகாதாரம் தொடர்பான விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, சுகாதாரத்துக்கு முரணான வகையில் தெருவோரத்தில் வைத்து தயிர் விற்பனை செய்தமை கண்டறியப்பட்டது.
வழக்குத் தாக்கல்
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு எதிராக அச்சுவேலி 1ஆம் பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு இன்று (10.09.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரு எதிரிகளுக்கும் மன்றினால் தலா 24,000 ரூபா வீதம் மொத்தம் 48,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.