பிரதமர் தலைமையில் நடைபெற்ற புத்தாண்டு தேசிய கலாசார நிகழ்வுகள்
தமிழ் - சிங்கள புத்தாண்டு தேசிய கலாசார நிகழ்வுகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (14) கம்பஹாவில் நடைபெற்றது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் தேசிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
புண்ணிய காலத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கம்பஹா மெதகம ஸ்ரீ சுனந்தாராம விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
கலந்து கொண்டிருந்த அமைச்சர்கள்
இம்முறை புத்தாண்டு தேசிய கலாசார விழாவின் சம்பிரதாயங்கள் கம்பஹாவிலுள்ள தர்ஷன வீரசிங்கவின் இல்லத்தில் நடைபெற்றது.
புத்தாண்டுக்கான வேலை ஆரம்பிக்கும் சுபநேரத்தில் வீட்டாரது அழைப்பின் பேரில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறித்த இல்ல வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பிரதி அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் சிறுவர்களுடன் இணைந்து பாரம்பரிய ஜனரஞ்சக விளையாட்டுகளிலும் ஈடுபட்டார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam