தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆயத்தமாகும் ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் காத்திரமான தீர்வு திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் சுபோதினி அறிக்கை தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆசிரியர் தொழிற்சங்கள், அதிபர் தொழிற்சங்கள் என்பன என்பன இணைந்து எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தி தொழிற்சங்கப் போராட்டம் குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
