யாழில் அரச பேருந்து மீது தாக்குதல்: ஒருவர் காயம்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) மதுபான போத்தலால் அரச பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது பயணி ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது, நேற்று (16.07.2024) 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
கிளிநொச்சி (Kilinochchi) வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் வைத்து தனியார் பேருந்து காப்பாளர் ஒருவரால் பியர் போத்தல் மூலம் பேருந்து தாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாக்குதலை மேற்கொண்ட நபர் சாரதி மற்றும் பொது மக்களால் பிடிக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் பியர் போர்த்தலின் கண்ணாடி துகள்கள் பட்டு பயணி ஒருவர் காயமடைந்துள்ளார்.
தனியார் பேருந்து குழு
மேலும், பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல் பாதுகாப்பாக பேருந்தை, சாரதி நிறுத்தியுள்ளார்.

தனியார் பேருந்து குழுவினருடன் ஏற்பட்ட நேர பிரச்சினை காரணமாகவே இந்த செயல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகள மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam