மும்பை இந்தியன்ஸை திணற வைத்த சி.எஸ்.கே!
புதிய இணைப்பு
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு இழந்து 158 ஓட்டங்களை எடுத்த நிலையில் குறித்த வெற்றியை சென்னை அணி பதிவு செய்துள்ளது.
155 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர் ராகுல் திரிபாதி 2 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ருதுராஜ் கெய்க்வாட் 53 ஓட்டங்களுடன் வெறியேறினார்.
சிவம் துபே 9 ஓட்டங்களுடனும், தீபக் ஹூடா 3 ஓட்டங்களுடனும் , சாம் கர்ரன் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இறுதிவரை களத்தில் இருந்த ராசின் ரவீந்திரா 65 ஓட்டங்களை விளாசி வெற்றிக்கு வழிவகுத்திருந்தார்.
இரண்டாம் இணைப்பு
மூன்றாவது ஐ.பி.எல் போட்டியில் களமிறங்கி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்நிலையில் 156 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக நூர் அகமட்(Noor Ahmad)18 ஓட்டங்களை வழங்கி 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
முதலாம் இணைப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தற்போது களத்தில் மோதிக்கொண்டுள்ளன.
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டி இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
3ஆவது போட்டி
இந்த போட்டி சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, 60 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பெடுத்தாடுகின்றது.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி.., தற்போது ஆட்சியராக நியமனம் News Lankasri

விஜய்யுடன் சந்திப்பு.. கண்களில் கண்ணீர்! அஸ்வத் மாரிமுத்து டிராகன் பற்றி தளபதி என்ன சொன்னார் பாருங்க Cineulagam
