உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை 4 வீதத்தால் வீழ்ச்சி
ஈரான் மற்றும் கட்டார் அதிகாரிகளுக்கு இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பால், உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை சுமார் 4 வீதத்தால் சரிந்துள்ளது.
அதன்படி, பிரெண்ட் மசகு எண்ணெய்: பீப்பாய் ஒன்றுக்கு 3.7 வீதம் குறைந்து 109.23 அமெரிக்க டொலராகப் பதிவானது.
தொடரும் ஆபத்துகள்
WTI எண்ணெய்: பீப்பாய் ஒன்றுக்கு 3.8 வீதம் குறைந்து 100.14 அமெரிக்க டொலராகப் பதிவானது.

மத்திய கிழக்கில் எண்ணெய் விநியோகத் தடைகள் குறையக்கூடும் என்ற நம்பிக்கையே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
எனினும், ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் எண்ணெய் உற்பத்திக் கட்டமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய சேதங்கள் காரணமாக விநியோகத்தில் தொடர்ந்தும் ஆபத்துகள் நிலவுகின்றன.
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan