ஈரான் - இஸ்ரேல் இடையிலான மோதல்: வேகமாக உயரும் மசகு எண்ணெய்யின் விலை
ஈரான் (Iran) மற்றும் இஸ்ரேல் (Israel) இடையிலான மோதலின் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் (Crude Oil) விலையானது இன்று (21.04.2024) உயர்ந்துள்ளது.
அதற்கமைய, சர்வதேச சந்தையில் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.14 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 87.29 அமெரிக்க டொலராக உள்ளது.
அதேவேளை, சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை, 1.752 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல்
ஈரானிய நகரம் இஸ்பஹான் மீது இஸ்ரேல் நடாத்திய தாக்குதலுக்கு பின் மசகு எண்ணெய்யின் விலை சடுதியாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், எண்ணெய் வளம் மிகுந்த ஈரான் நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலின் இந்த தாக்குதலானது இரு நாடுகளுக்குமிடையிலான மோதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடும் என இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இந்த தாக்குதலுக்கான மூலத்தை ஈரானிய இராணுவம் இன்னும் கண்டறியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
