மீண்டும் தாக்குதல்! உச்சத்தை நோக்கி கச்சா எண்ணெய் விலை - இலங்கையில் ஏற்படப்போகும் தாக்கம் என்ன..!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, இன்று (09.07.2026) காலை 6 மணி நிலவரப்படி WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.28 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. அத்துடன் இது 1.03 சதவீத அதிகரிப்பாகும் என தெரியவருகிறது.
அதேவேளை, பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.81 டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.01 சதவீத உயர்வாகப் பதிவாகியுள்ளது.
விலை அதிகரிப்பு
ஐக்கிய அரபு இராச்சியத்தின் மேர்பன் ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 73.57 டொலர்களாகக் காணப்படுவதுடன், இது 6.67 சதவீத பாரிய விலை உயர்வை பதிவு செய்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தி வரும் நிலையில் இவ்வாறு மீண்டும் கச்சா எண்ணெய் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள ஈரானின் துறைமுக நகரங்களான சிரிக் மற்றும் பண்டர் அப்பாஸ் உள்ளிட்ட ஈரானின் தெற்குப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலைமையானது இலங்கையில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டுமென பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri