எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட. 12 இந்திய (India) கடற்றொழிலாளர்கள் இன்று (12) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 12 கடற்றொழிலாளர்களும் மயிலிட்டி கடற்கரை முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நீரியல் வளத்துறை மற்றும் கடல் தொழில் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாம்பன் பாலம் முற்றுகை
இதேவேளை கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்களையும் விடுவிக்க கோரி இந்தியாவின் பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு இந்திய கடற்றொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தை காலையிலிருந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனைத்து கடற்றொழிலாளர்களும் விடுதலை செய்யப்படும்வரை தமது போராட்டம் தொடரும் என்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
