அம்பாறையில் அதிகரித்துள்ள முதலைகளின் நடமாட்டம்
அம்பாறை (Ampara) மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை பகுதி, ஒலுவில் பகுதி, நிந்தவூர், மருதமுனை, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு ,கிட்டங்கி, நாவிதன்வெளி, உள்ளிட்ட பகுதிகளை அண்மித்த ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.
@tamilwinnews அம்பாறையில் அதிகரித்த முதலைகள் நடமாட்டம் #Lankasrinews #Tamilwinnews #Srilanka #Ampara #crocodile ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
முதலை அச்சறுத்தல்
இந்நிலையில், இரவு நேரங்களில் சுமார் 9 மற்றும் 5 அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள வாவிகள், குளங்கள, களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன.
தற்போது சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ளதனால் வயல் நிலங்கள் கால்வாய்கள் அண்டிய பகுதியில் நீருக்காக குளங்களை நாடிச் செல்லும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் முதலைகளின் இரைக்கு உள்ளாகின்றது.
எனினும், முதலைகளின் பெருக்கம் அதிகமாக உள்ள போதும் இவை சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்களோ எச்சரிக்கை பலகைகளோ இதுவரையும் வைக்கப்படவில்லை.
எனவே, இது குறித்து உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |