கொழும்பிலும் புறநகர் கரையோரங்களில் முதலை அச்சுறுத்தல்
கொழும்பின் புறநகர்களான தெஹிவளை, கல்கிஸ்ஸை, ரத்மலானை, பாணந்துறை மற்றும் கொழும்பின் வெள்ளவத்தை ஆகிய இடங்களின் கடலோரப் பகுதிகளில் முதலை அச்சுறுத்தல்கள் மீண்டும் அதிகரித்து வருவதாக இலங்கை உயிர்காக்கும் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த கடலோரப் பகுதிகளில் முதலைகள் சுற்றித் திரிவதை கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.
இது உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வனவிலங்கு அதிகாரிகள்
சமீபத்தில், இந்தப் பகுதிகளில் ஒரு முதலை கண்டறியப்பட்டதை அடுத்தே பீதிநிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று, கடற்றொழிலாளர்கள் குழு ஒன்று முதலை ஒன்றைப் பிடித்து பெல்லன்வில - அத்திடிய வனவிலங்கு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
பொதுவாக குறைந்த அலை காலங்களில் முதலைகள் இயற்கையாகவே கடலுக்கு இடம்பெயர்கின்றன என்றும், கடந்த மூன்று ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதிகளில் அவற்றைப் பார்ப்பது அதிகரித்துள்ளது என்றும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
