மழை ஓய்ந்ததும் முதலைகளின் நடமாட்டம் அதிகம்: பொதுமக்கள் கவலை (Videos)
மட்டக்களப்பு - படுவாங்கரைப் பகுதியிலுள்ள சிறிய குளங்கள் நிரம்பியுள்ள இந்நிலையில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும், தெரிவிக்கின்றனர்.
போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் கோவில்போரதீவு, பெரியபோரதீவு பெரியகுளம், வெல்லாவெளி, பொறுகாமம், ஆகிய இடங்களில் அமைந்துள்ள குளங்களில், முதலைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதாகவும், இதனால் அப்பகுதியில் தமது வாழ்வாதாரமாக வளர்த்து வரும் ஆடு, மாடுகளையும், மிகவும் சூட்சுமமான முறையில் முதலைகள் பிடித்து வருவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முதலைகள் வறட்சி காலத்தில் இவ்வாறு சிறிய குளங்களிலிருந்து மட்டக்களப்பு வாவிக்குச் செல்வதும், மழைக் காலங்களில் வாவியிலிருந்து மீண்டும் குளங்களுக்குள் வருவதும் வழக்கமாகக் கொண்டுள்ளன.
இவ்வாறு குளங்களுக்கு வரும் முதலைகள்
குளங்களில் நீர் அருந்தச் செல்லும், ஆடு, மாடு உள்ளிட்ட வளர்ப்புப்
பிராணிகளையும், தாக்கி உண்டு வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.





நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
