மாடுகளை வேட்டையாடி வந்த 9 அடி நீளமான பாரிய முதலையொன்று உயிருடன் மீட்பு
புத்தளம் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் மாடுகளை வேட்டையாடி வந்த 9 அடி நீளமான பாரிய முதலையொன்று தூண்டிலில் சிக்கிய நிலையில் நேற்றைய தினம்(21.06.2023) மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் குளத்தில் குளிக்கச் சென்ற வேளை, தூண்டிலில் சிக்கியிருந்த முதலையை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து கருவகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதேச மக்கள் தகவலை வழங்கியுள்ளனர்.
காயங்களுக்கு உள்ளாகியிருந்த முதலை

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த அதிகாரிகள் தூண்டிலில் சிக்கியிருந்த முதலையை கிராம மக்களுடன் இணைந்து பாரிய சிரமத்திற்கு மத்தியில் உயிருடன் மீட்டுள்ளனர்.
மேலும், முதலையின் வாயில் தூண்டில் சிக்கியிருந்ததாகவும் இதன்போது முதலை காயங்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட முதலையை சிகிச்சையளிப்பதற்காக நிகாவெரெட்டிய மிருக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam