ஒன்றாரியோ பாடசாலைகளில் அலைபேசி பயன்படுத்துவதற்கு தடை: எழுந்துள்ள விமர்சனங்கள்
கனடாவின் ஒன்றாரியோ மாகாண பாடசாலைகளில் அலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் முதல் குறித்த தடை அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இந்த தடை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அலைபேசி பயன்பாட்டுக்கு தடை
வகுப்பறையில் கற்கும் போது மாணவர்கள் கவனம் சிதறுவதை தடுக்கும் நோக்கில் இவ்வாறு அலைபேசி பயன்பாட்டுக்கு தடை விதிப்பதாக மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
வகுப்பறைகளில் அலைபேசி பயன்படுத்துவது தடை செய்யும் அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியது என ஆசிரியர் ஒன்றியங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் இந்த நடைமுறை தொடர்பில் தெளிவான நியமங்கள், வரையறைகள் விதிக்கப்பட வேண்டியது அவசியம் என ஆசிரிய தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அனேகமான பாடசாலைகளில் அதிபர்களுக்கு இந்த தடை தொடர்பில் போதிய அளவு தெளிவு கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வகுப்பறையில் அலைபேசி பயன்படுத்தும் மாணவர்களின் அலைபேசியை கையகப்படுத்த நேரிட்டால் அதை என்ன செய்வது என்பது குறித்து தெளிவான அறிவுறுத்தல்கள் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |