ராஜபக்ச குடும்ப ஊழல்களை விமர்சித்து அமைச்சுப் பதவியை இழந்தேன்: சம்பிக ரணவக்க
ராஜபக்ச ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களை விமர்சித்த காரணத்தினாலேயே தான் மின்சக்தி அமைச்சுப் பதவியில் இருந்த விலக்கப்பட்டதாக சம்பிக ரணவக்க எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய குடியரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக ரணவக தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2010 ஆம் ஆண்டு ஆரம்பமான ராஜபக்ச ஆட்சியின் இரண்டாம் தவணையின் பின்னர் நாட்டின் வருமானம் ஈட்டும் வழிகள் வீழ்ச்சியடைந்தது.
பொருளாதார வீழ்ச்சி
அதற்குப் பதிலாக ஊழல் மற்றும் மோசடிகள் அதிகரித்தது. அதனை வெளிக் கொண்டுவரும் நோக்கில் , பொருளாதார வீழ்ச்சி குறித்து "அல பாலு ஆர்த்திகய" என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதி வௌியிட்டேன்.
அதன் மூலம் அன்றைய அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்த முயற்சித்தேன். அதற்கான பரிசாக , 2012வரை எனது வசம் இருந்த மின்சக்தி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

வேறு அமைச்சுப் பொறுப்பில் நியமிக்கப்பட்டேன் மோசடி, ஊழல், முறைகேடுகளுக்கு எதிராக அப்போதைய ராஜபக்ச அரசாங்கம் செயற்படவில்லை. அன்றைக்கு நடைபெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் காரணமாகவே இந்நாட்டில் இன்று பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அன்றைய ராஜபக்ச ஆட்சியே பிரதான காரணம் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam