நாடாளுமன்றத்தில் பொய் கூறும் சாணக்கியன்: எழுந்துள்ள விமர்சனம்
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அண்மைக்காலமாக சபையில் தெரிவித்தவை யாவும் அப்பட்டமான பொய்கள் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஊடக மையத்தில் நேற்று(06) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்த கருத்தை மறுக்கின்றேன்.
சாணக்கியனுக்கு சவால்
அவருக்கு நாடாளுமன்ற சிறப்பு உரிமை இருக்கிறது என்பதற்காக மற்றவரின் சுய கௌரவத்தை உரிமையை இழுக்கும் உரிமை அவருக்கு இல்லை. பிள்ளையானின் சகா நான் என குறிப்பிட்டிருக்கிறார்.
அது மாத்திரமல்ல நான் கொழும்பு ஹில்டன் ஹோட்டலுக்கு சென்றதாக பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார். கடந்த இரண்டு வாரங்களில் நான் கொழும்பு செல்லவே இல்லை. எனது சாரதி சுதா என்று சொல்கின்றார். முடிந்தால் அந்த சுதாவை காட்டுமாறு சவால் விடுகின்றேன்.
எனவே தான் நாடாளுமன்றத்தில் பச்சைப் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்ற அவரின் இந்த சித்து விளையாட்டுகளை இனியாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் நான் முறைப்பாடு ஒன்றை வழங்கவுள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமாக இருந்தால் அவர் இவ்வாறான ஊடக மாநாட்டை நடத்தி பகிரங்கமாக நேருக்கு நேர் கூறட்டும் என சவால் விடுகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
