ரணிலின் சித்து விளையாட்டு இம்முறை பலிக்காது: எழுந்துள்ள விமர்சனம்
ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) சித்து விளையாட்டு இம்முறை பலிக்காது என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (29.05.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“தேர்தல்கள் தொடர்பில் பாலித பண்டார கூறிய கருத்தினை நாம் அவரின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. இது ரணில் விக்கிரசிங்கவின் கருத்தாகும்.
நாட்டை வங்குரோத்தாக்கிய அரசாங்கம்
இம்முறை தேர்தலில் தாம் மக்களால் விரட்டியடிக்கப்படுவேன் என்ற சந்தேகத்தில் இவ்வாறான சித்து விளையாட்டுகளை இவர்கள் செய்து வருகின்றனர்.
நாட்டை வங்குரோத்தாக்கிய ரணில் ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உண்மையில் ஜனாதிபதி தேர்தலுக்கு பயந்து இவ்வாறான கருத்துக்களை ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகின்றது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |