இலங்கை இராணுவத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி! அரசின் தீவிர நடவடிக்கை..
2004ஆம் ஆண்டு சுனாமியால் ஏற்பட்ட இழப்பை போல இலங்கையில் தற்பொழுது பேரழிவு ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்புகள் தற்போது 400 அண்மித்துள்ளன, பலரை காணவில்லை. உணவில்லாமல், உடையில்லாமல் மக்கள் நிர்கதியாகியுள்ளனர்.
இலங்கையின் அண்டை நாடுகள் இந்தியா,பாகிஸ்தான், போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவிகள் புரிந்துள்ளன.
இந்தநிலையில், தற்போதைய பேரனர்த்தை எதிர் கொண்டு சமாளிக்க இலங்கை படைவீரர்களால் முடியவில்லை என்பதை காணக்கூடியதாக உள்ளது என்றுஇராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏனெனில் இந்தியாவிலிருந்தே உலகுவானூர்தியின் மூலம் படைவீரர்களும மோப்ப நாய்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.
படைவீரர்களுக்காகவே வரவுசெலவுதிட்டத்தில் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி...