நாடாளுமன்றத்திற்கு பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்கள் - சபையில் கடும் அமளிதுமளி
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் ஏற்பட்ட நீண்ட வாக்குவாதம் காரணமாக சபையில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது.
இதன் போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபைக்கு பொருந்தாத வார்த்தைகளை பயன்படுத்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நேற்று சபாநாயகரிடம் முறைப்பாடு ஒன்றை செய்ய சென்ற போது, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் உள்ளிட்ட ஆளும் கட்சியினர், அவரை அச்சுறுத்தியதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அப்போது கருத்து வெளியிட்ட சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன, மனுஷ நாணயக்கார, சபாநாயகருக்கு அருகில் சென்று அச்சுறுத்தியதை கண்டிப்பதாக கூறினார்.
சபாநாயகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் போதே ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் சூடான வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 3 மணி நேரம் முன்
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri