கொழும்பு உள்ளிட்ட பிரதேச மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி
மின்சாரம் துண்டிக்கப்படும் போது நீர் இறைக்கும் பணி தடைப்படுவதனால் கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் நீர் விநியோகத்தை தடை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் முடிந்தவரை ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தி நீர் இறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த நாட்களில் நீரின் பயன்பாடும் உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் 7 மணித்தியாலங்களுக்கு மேல் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



