ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமானிகளுக்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 42 விமானிகள் கடந்த வாரம் தமது பதவிவிலகல் கடிதங்களை கையளித்ததாகவும், 85 விமானிகள் விமான போக்குவரத்து அதிகாரசபையின் சான்றிதழ் கடிதங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானி ஒருவர் மாதாந்த சம்பளமாக $10,000 பெறுகிறார், ஆனால் டொலர் மதிப்பு 225 ரூபாய் என்ற குறைந்த அளவில் கணக்கிடப்படுகிறது.

கடும் நெருக்கடியை சந்திக்கும் விமான சேவை
மற்ற சர்வதேச விமான நிறுவனங்களின் பைலட் $30,000 முதல் $40,000 வரை வரியில்லா சம்பளம் பெறுகிறார் என்றும் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் சுமார் 240 விமானிகள் பணிபுரிவதாகவும், சுமார் 80 விமானிகள் வெளியேறினால், இந்த வருடத்தின் நடுப்பகுதிக்குள் விமான சேவை கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும், கடந்த டிசம்பர் மாதம் முதல் டொலர் ஒன்று, 295 ரூபாவாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam