துறைமுகத்தில் சிக்கியுள்ள பால்மா கொள்கலன்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்
டொலர் பற்றாக்குறை காரணமாக துறைமுகத்தில் சிக்கியுள்ள மூன்று லட்சத்து 60 ஆயிரம் கிலோ கிராம் பால் மாவை எதிர்வரும் திங்கள் கிழமை வரை விடுவித்துக்கொள்ள முடியாமல் போகும் என நம்புவதாக பால் மா இறக்குமதியாளர்களின் பேச்சாளர் லக்ஷ்மன் வீரசூரிய ( Lakshman Weerasuriya) இன்று தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் கூடிய கொள்கலன் பெட்டிகளை விடுவிக்க தேவையான 50 மில்லியன் டொலர்களை வெளியிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.
இதனையடுத்து பால்மா இறக்குமதியாளர்களின் வங்கிகளுக்கு அந்த டொலர்கள் இன்று கிடைக்கும் என நம்புவதாகவும், வங்கிகளுக்கு டொலர்கள் கிடைத்தால், எதிர்வரும் திங்கள் கிழமை பால் மா அடங்கிய கொள்கலன்களை விடுவித்துக்கொள்ள முடியும் எனவும் வீரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள டொலர் வங்கிகளுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் பற்றி தெரியாது எனவும்,பால் மா அடங்கிய 16 கொள்கலன் பெட்டிகளை விடுவித்துக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam