இலங்கையில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுக்கும் கொலையாளிகள்
இலங்கையில் கொலைகளை மேற்கொள்ளும் பாதாள உலக குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் இரகசியமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுவிடுவதாக தெரியவந்துள்ளது.
அண்மைக்காலமாக இந்த நிலைமை காணப்படுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் இலக்கு வைக்கப்பட்ட கொலைகளை மேற்கொள்வதற்கு முன்னர் வேறு நாட்டிற்குத் தப்பிச் செல்லத் தேவையான விசாக்கள், கடவுச்சீட்டுகள் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே தயாரித்து, சம்பந்தப்பட்ட கொலைகளுக்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொலையாளிகள்
கடந்த காலங்களில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெற்ற பல பாதாள உலக கொலைகளுடன் தொடர்புடைய கொலையாளிகள் சிலர் 48 மணித்தியாலங்கள் கடக்கும் முன்னரே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, பாதாள உலக கொலைகாரர்கள் சிலர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த சில நாட்களில் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் வழிமுறையை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தப்பியோட்டம்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சதுர்க என்ற பாதாள உலக கொலையாளி, அத்தனகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரைக் கொன்று விட்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டு வந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனாரைக் கொன்ற பாதாள உலகத் தலைவரான கொஸ்கொட சுஜீயின் இரண்டு உதவியாளர்கள் கொலை நடந்த சில நாட்களிலேயே நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri
