கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பெண்கள் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் எந்தவித சட்ட அனுமதியும் இன்றி சுற்றுலா விசாவின் கீழ் ஓமானுக்கு செல்வதற்காக வந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 09:25 மணிக்கு WY 372 விமானத்தில் பயணிப்பதற்கு இவர்கள் முயற்சித்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இரண்டு பெண்களும் விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சாவடிக்கு அருகில் செல்லும் பாதுகாப்பு வேலியினூடாக ஊடுருவ முயற்சித்ததாகவும் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகள் முயற்சியை தடுத்து இரு பெண்களையும் தமது காவலில் எடுக்க முயன்றனர்.
மேலதிக விசாரணைகளுக்காக இந்த இரண்டு பெண்களும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri
