டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பலைச் சேர்ந்த கிட்மால் பினோய் தில்ஷான் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கொலை, மிரட்டல், பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு டுபாயில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் இன்று (29) அதிகாலை டுபாயிலிருந்து விமானத்தின் ஊடாக பலத்த பாதுகாப்புடன் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
இவர் மத்துகம ஷான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் தலைவரின் பிரதான உதவியாளர் என்றும் கூறப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று விமானத்தில் வந்த சந்தேகநபரை கைது செய்து மத்துகம பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளதுடன்,பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
