மைத்திரிக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டு? செயற்குழு கூட்டத்தில் நாளை விவாதம் 2 days ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கான பரிந்துரை தொடர்பில் நாளை ஆராயப்படும்.
இந்த விடயம் தொடர்பில் நாளை இடம்பெறும் கட்சி செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று பிற்பகல் கட்சி அலுவலகத்தில் கூடியது. ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி எழுப்பினர், எனினும், கட்சியின் செயலாளர் பதில் கூறுவார் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, "செயற்குழுவில் ஒரு யோசனை தாக்கல் செய்யப்படும்." என தெரிவித்துள்ளார்.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
