ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு இழுத்து வரப்பட்ட மற்றுமொரு ஆபத்தான நபர் - பின்னணி என்ன....!
ரஷ்யாவில் தலைமறைவாக இருந்த குற்றக்கும்பல் உறுப்பினரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான ரொட்டும்ப அமில என அழைக்கப்படும் சேபால ரத்நாயக்க அமில சம்பத் இலங்கைக்கு இழுத்து வரப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபர் தொடர்பான பல தகவல்கள் வெளியாகி உள்ளன
சந்தேநபர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ரஷ்யாவில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ரொட்டும்ப அமில, 44 வயதான மாத்தறை ஊருபொக்க பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மனித படுகொலை
குறித்த சந்தேநபர் அங்கொட லொக்கா மற்றும் மாகந்துரே மதுஷ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளார்.

அத்துடன் அவர் 2024ஆம் ஆண்டு 07ஆம் மாதம் 08ஆம் திகதி அன்று இடம்பெற்ற கிளப் வசந்த கொலையுடனும் தொடர்புடையவராவாராகும்.
மேலும், 2016ஆம் ஆண்டு முல்லேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற மனிதப் படுகொலை ஒன்றையும் சந்தேகநபர் மேற்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
2019ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற மாகந்துரே மதுஷின் பிறந்தநாள் விருந்தின் போது கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
பின்னர் 2023ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்றிருந்தார்.
அதிகாரிகளால் அவர் கைது
இதன் பின்னணியில், சந்தேகநபரை கைது செய்வதற்காக இலங்கையின் பல்வேறு நீதிமன்றங்களினால் சர்வதேச சிவப்பு அறிவித்தல்களும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ரொட்டும்ப அமில, இன்று காலை 09.58 மணியளவில் ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர், விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam