மாணவனை பலவந்தமாக கடத்திச் சென்று இளைஞர் செய்த மோசமான செயல் (Video)
14 வயதான பாடசாலை மாணவனை பலவந்தமாக கடத்திச் சென்று மரம் ஒன்றில் கட்டி வைத்து சிகப்பு எறும்பு மற்றும் உடலில் அரிப்பை ஏற்படுத்தும் செடியின் இலைகளை போட்டதாக கூறப்படும் 17 வயதான இளைஞனை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
17 வயதான இந்த சந்தேக நபர் சிலாபம்-பங்கெதெனிய, திகன்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை எதிர்நோக்கிய மாணவன் பங்கதெனிய-எலஸ்வத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த போது அங்கு சென்ற சந்தேகநபர் மாணவனை பலவந்தமாக அழைத்துச் சென்றுள்ளார்.
இதன் பின்னர் சந்தேகநபருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது எமது குற்றப் பார்வை,



