தமிழர் பகுதியில் அதிகரிக்கும் வாள் வெட்டு தாக்குதல்! (Video)
நாடளாவிய ரீதியில் பல குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது.
கிளிநொச்சி- முல்லையடி பகுதியில் அடையாளந்தெரியாத நபர்களினால் இளைஞர் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியை கழுத்தை நெரித்து, சித்திரவதை புரிந்து சங்கிலி மற்றும் மோதிரம் என்பவற்றை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் அப்பகுதியை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம் கடலில் மிதந்த நிலையில், நேற்று காலை, ஆண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இவ்வாரம் இலங்கையில் இடம்பெற்ற, குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வழங்குகிறது எமது குற்றப் பார்வை நிகழ்ச்சி,





அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
