பல இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டு பொருட்கள் திருட்டு: எட்டு பேர் கைது(Photo)
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டு உபகரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு பேர் நேற்றிரவு(24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, திருகோணமலை மற்றும் பாலையூற்று பகுதியை சேர்ந்த 25வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளில் கைப்பற்றப்பட்ட பொருட்கள்
திருகோணமலை பகுதியுள்ள வீடொன்றினை உடைத்து மின்விசிறி,தையல் இயந்திரம், ஒலி பெருக்கி சாதனங்கள்,இசைக்கருவி மற்றும் மின்னழுத்தி போன்ற உபகரணங்களை திருடி விற்பனை செய்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் 40 வாகனங்கள் மாயம் |