மாளிகாவத்தையில் கத்தி குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தகர்
கொழும்பு மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. மாளிகாவத்தை மில்டன் பெரேரா வீதியில் கால்டன் முன்பள்ளி எதிரில் உள்ள குறுக்கு வீதியில் வைத்து பிரபல குற்றவாளி ஒருவர், பொலிஸ் உத்தியோகஸ்தரை கத்தியால் குத்தியுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் இன்று முற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரி.எம்.ஏ.டி. குமார என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நடந்த கொள்கை சம்பவம் தொடர்பாக கிடைத்த முறைப்பாடு குறித்து பொலிஸ் உத்தியோகஸ்தர், சந்தேக நபரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
வீடுகளில் கொள்ளையிட்ட பிரபல குற்றவாளி
அப்போது திடீரென பொலிஸ் உத்தியோகஸ்தரை கத்தியால் குத்தி விட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சம்பத் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் கை ஒன்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நாட்டின் பல பகுதிகளில் வீடுகளில் கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர் எனவும் அந்த நபர் பிரபலமான குற்றவாளி எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
