மாணவ செயற்பாட்டாளர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை-செய்திகளின் தொகுப்பு
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூன்று மாணவர் செயற்பாட்டாளர்கள் தங்காலை மத்திய தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹஷாந்த குணதிலக்க, அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் என்பன அவர்கள் தொடர்பில் தனியாக விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அரச துரோக சதித்திட்டம் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்வதுடன், பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan