திரைப்படபாணியில் கெஹல்பத்தர குழுவை சுற்றிவளைத்த இலங்கை பொலிஸார்!
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட 5 பாதாள உலக குழுவினர்களை இலங்கை பொலிஸார் எவ்வாறு திட்டமிட்டனர் என்பது தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றவாளிகளை கைதுசெய்ய இலங்கை பொலிஸார் எழு நாட்கள் இந்தோனேசியாவில் பிச்சைகாரர்கள் போல் வீதியில் படுத்துறங்கி திரைப்படபாணியில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் தெரிய வருகையில்
குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில், மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றப்பிரிவு பொலிஸ் அதிகாரி ரோஹான் ஒலுகலவுக்கு நம்பகமான தகவல் ஒன்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இரகசிய நடவடிக்கை
கெஹல்பத்தர பத்மே மற்றும் கொமாண்டே சலிந்த ஆகியோர் தாய்லாந்தில் இருந்து இந்துனோசியா தலைநகர் ஜகர்த்தாவுக்கு வந்துள்ளதாக குறித்த செய்தி வழங்கப்பட்டுள்ளது.
அதைதொடர்ந்து ரோஹான் ஒலுகல மற்றும் மகிந்த ஜயசுந்தர ஆகிய பொலிஸ் அதிகாரிகள் இந்துனோசியா நோக்கி சென்றுள்ளனர்.
இவர்களை கைது செய்வதற்கான இரகசிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளும் திட்டத்தை, பொலிஸ் மா அதிபர் மற்றும் உயரதிகாரிகள் சிலரே அறிந்திருந்துள்ளனர்.
கைது நடவடிக்கை முன்னேடுக்கப்பட்ட திட்டமிடட்ட ஏழு நாட்களும் இரு பொலிஸ் அதிகாரிகளும் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட பொலிஸார் ஒரு வேளை உணவை மட்டுமே உற்கொண்டுள்ளனர்.
நடைபாதையில் படுத்துறங்கி சந்தேக நபர்கள் தொடர்பில் அவதானமாக இருந்துள்ளனர்.
ஆனாலும் அவர்களுக்கு தகவல் எப்படியோ கசிந்த நிலையில் ஜகர்த்தா நகரில் இவர்கள் தங்கியிருந்த அதி நவீன சொகுசு அறையில் இருந்து குடு நிலங்க, பத்மே, சலிந்த ஆகியோர் தப்பியோடியுள்ளனர்.
பத்மே, சலிந்த
அப்போது தங்களை கைது செய்யாமல் இருப்பதற்காக பத்மே, சலிந்த ஆகியோர் ஜகர்த்தா பொலிஸாருக்கு கப்பமாக ஒரு கோடி கொடுக்க முயற்சித்த போதும் அது நடக்கவில்லை என கூறப்படுகிறது.
பின்னர் குறித்த இரு பொலிஸ் அதிகாரிகள் பிச்சைக்காரகள் போல் பாதையில் இருந்து குற்றவாளிகள் எங்கு போகிறார்கள் என அவதானித்துள்ளனர்.
இதன்படி ஜகர்த்தாவில் இருந்து தப்பியோடிய அவர்கள், ஜகர்த்தா நகரத்தில் இருந்து ஏழு கிலோ மீற்றுக்கு அப்பால் இருந்த சொகுசு அரையில் இருந்துள்ளனர்.
அங்கு வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தப்பிச் செல்வது சிசிரீவி பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இதன்படி, இவர்களுடன் பெக்கோ சமன்,தெம்பிலி லியிரு மற்றும் பெக்கோ சமனின் மனைவி மற்றும் மூன்று வயது குழந்தையும் இருந்துள்ளனர்.
பொலிஸார் உறுதி
அதற்மைய கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையில் பலவாறான குற்றச்ச செயல்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் என பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.
இவர்களுக்கு சிவப்பு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. மந்தினு பத்தம சிறி பெரேரா என்றழைக்கப்படும் கேல்பத்தர பத்மே, இவர் கம்பஹா பகுதியில் உள்ள கேஹல்பத்தரவில் வசித்தவர்.
கொழும்பு நீதிமன்ற தொகுதியில் கனேமுல்ல சன்ஜீவ கொலை செய்த சம்பவத்திலேயே கேஹல்பத்தர பத்மே தொடர்பில் பேசுபொருளானது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



