யாழில் வீடொன்றுக்குள் புகுந்து தீயிட்டு கொளுத்திய விவகாரம்! இருவர் கைது
மானிப்பாய்-சண்டிலிப்பையில் வீடொன்றுக்குள் புகுந்து மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்திய வன்முறைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டடிலில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு தெ.மேனன் தலைமையிலான குழுவினரால் நேற்று(23.08.2023) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 23,24 வயதுடைய மானிப்பாயைச் சேர்ந்த சந்தேகநபர்களை கைது செய்ததுடன் வன்முறை சம்பவத்துக்கு பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள் இரண்டு வாள்கள், இரும்புக் கம்பி ஒன்று என்பனவற்றையும் மீட்டுள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கை
ஏற்கனவே இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் பழிவாங்கும் நோக்கிலேயே இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று(24.08.2023) நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் மேலும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 6 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றத்தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |