யாழில் பல மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் - வெற்றிலைக்கேணி பகுதியில் 42 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடற்படையினரால் நேற்று (08.06.2023) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 128 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான எடை) கேரளா கஞ்சா கடலில் சிக்கியது.
விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான 04 சாக்கு மூட்டைகளை மீட்டுள்ளதுடன் அதில் இருந்து 53 பொதிகள் அடைக்கப்பட்டிருந்த சுமார் 128 கிலோ 100 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா இருந்துள்ளது.

கைவிடப்பட்ட கஞ்சா
தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகள் காரணமாக, கேரள கஞ்சாவை நாட்டிற்கு கொண்டு வர முடியாமல் கடத்தல்காரர்கள் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட கேரள கஞ்சாவை மேலதிக நடவடிக்கைக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வரை கடற்படை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: நான்காம் இடத்தில் உச்சம் பெறும் குரு! மேஷத்துக்கு ஜாக்பாட் உறுதி Manithan