யுக்திய நடவடிக்கையின் வெற்றியை அறிவித்த பொலிஸ்மா அதிபர்
போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' விசேட நடவடிக்கையினால் குற்றச்செயல்கள் 23 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை அவர்களது குடும்பங்களுடன் ஒன்றிணைக்கும் நிகழ்வு பத்தரமுல்லையில் இடம்பெற்ற போது பொலிஸ் மா அதிபர் இந்த நடவடிக்கையின் வெற்றியை அறிவித்துள்ளார்.
யுக்திய நடவடிக்கை
மேல்மாகாணத்தில் அதிகளவு போதைப்பொருள் விநியோகம் இடம்பெறுவதாகவும் நுகேகொட மற்றும் கல்கிசை பிரதேசங்களில் அதிகளவான பாதிப்புகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வருட இறுதிக்குள் இலங்கையில் குற்றச் செயல்கள் 50 சதவீதமாக குறையும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆறு மாதங்களுக்குள் இந்த நடவடிக்கையின் மூலம் 5,000 போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் வலையமைப்பில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை நாங்கள் அகற்றிவிட்டோம், ”என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
