கிரிக்கட் வீரர் நுவான் சொய்சாவிற்கு ஆறு ஆண்டுகால தடை
முன்னாள் கிரிக்கட் வீரர் நுவான் சொய்சாவிற்கு ஆறு ஆண்டுகால தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் மோசடி தவிர்ப்பு விதிகளை மீறிச் செயற்பட்டதாக சொய்சா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அனைத்துவிதமான கிரிக்கட் செயற்பாடுகளுக்கும் சொய்சாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 31ம் திகதி முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக அடிப்படையில் கடந்த 2018ம் ஆண்டில் சொய்சாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நிர்ணய சதியுடன் நுவான் சொய்சா தொடர்புபட்டிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
சுமத்தப்பட்ட மூன்று வகையான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் இந்த போட்டித் தடை அமுல்படுத்தப்பட உள்ளது.
இலங்கையின் சார்பில் 125 போட்டிகளில் பங்கேற்றுள்ள நுவான் சொய்சா, பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.