அவுஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது
அவுஸ்திரேலிய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்டுவர்ட் மெக்கில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டதாக மெக்கில் மீது அவுஸ்திரேலியா பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஓய்வு பெற்ற முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான மெக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தாம் கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்திருந்தார்.
வர்த்தகம் தொடர்பிலான பிணக்கு
சிட்னியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு எதிரில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் தம்மை கடத்தி துன்புறுத்தியதாக முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்திய அந்நாட்டு பொலிஸார் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பிலான பிணக்கு காரணமாகவே மெக்கில் கடத்தப்பட்டார் என கண்டறிந்துள்ளனர்.
நீண்ட விசாரணைகளின் பின்னர் இந்த விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய பொலிஸார் மெக்கிலை கைது செய்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நீண்ட விசாரணை
ஸ்டுவர்ட் மெக்கில் கிரிக்கெட் ஜாம்பவான ஷேன் வோர்ன் விளையாடிய காலப்பகுதியில் அவுஸ்திரேலிய அணியில் இடம்பெறிந்திருந்தார்.
அவுஸ்திரேலிய அணயின் சார்பில் 44 டெஸ்ட் போட்டிகளில் 208 விக்கட்டுகளை மெக்கில் வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.