கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான 3 குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் மூன்று இன்று (18.05.2023) கைவிடப்பட்டுள்ளன.
இது தொடர்பான வழக்கு இன்று (18.05.2023) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரச சட்டத்தரணி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு 20/20 உலகக் கிண்ண தொடர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றிருந்த நிலையில், தனுஷ்கவுக்கு முதல் போட்டியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தனுஷ்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல்
இந்நிலையில், சமூகவலைத்தளம் ஊடாக அறிமுகமான பெண்ணொருவரை சந்தித்து, சிட்னியின் கிழக்குப் புறநகரில் உள்ள வீட்டிற்கு சென்ற தனுஷ்க, தனது அனுமதி இல்லாமல் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என குறித்த பெண் தனுஷ்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி News Lankasri

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
