இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க விடுத்துள்ள கோரிக்கை
சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜூரியின்றி விசாரணை நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனுஷ்க குணதிலக்க, கடந்த வருடம் நடைபெற்ற T20 உலகக் கிண்ணப்போட்டியில் பங்குபற்றுவதற்காக சிட்னியில் யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்தரணிகள் விடுத்துள்ள கோரிக்கை
இந்நிலையில், குறித்த வழக்கை நீதிபதி முன்னிலையில் மட்டுமே விசாரிக்குமாறு சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 24ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
32 வயதான தனுஷ்க குணதிலக கடந்த வருடம் நடைபெற்ற T20 உலகக் கிண்ணப்போட்டியில் பங்குபற்றுவதற்காக சிட்னியில் யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் புதிய தொடர்.. சன் டிவியில் விரைவில், ஹீரோ யார் தெரியுமா? Cineulagam
