மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை பழைய மாணவர்களுக்கிடையில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி (Photos)
மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் (PPA) ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் நடைபெற்ற இந்தச் சுற்று போட்டியில், பழைய மாணவர்களைக் கொண்ட 24 அணிகள் கலந்து கொண்டனர்.
இறுதிச் சுற்றுப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (27.02.2023) மாலை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

வெற்றிக்கிண்ணம்
குறித்த சுற்றுப்போட்டியில், 2003 O/L அணியினரும் 2018 O/L அணியினரும் தெரிவு செய்யப்பட்டு போட்டி இடம்பெற்றுள்ளது.
இதன்போது 2018 O/L அணியினர் 78 ஓட்டங்களைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், 2018 O/L அணியினர் முதல் இடத்தையும், 2003 O/L அணியினர் 2ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

கௌரவிப்பு
மேலும், 2018 O/L அணியினர் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர்.
இறுதி பரிசளிப்பு நிகழ்வு பாடசாலையின் அதிபர் என்.எம்.மாஹிர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது விருந்தினர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களைக் கௌரவித்ததோடு
வெற்றிக்கிண்ணங்களையும் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam